தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 223 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நேற்றைய பாதிப்பு 300க்கும் மேல் இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
சென்னையில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 29 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,131 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,012 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்..
உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய ரஷிய இளம் வீரர்கள் பெற்றோரை பார்க்க ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சல்