உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மாணவிக்கு பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொடைக்கானல் அப்சர்வெட்டரி பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரது இளைய மகளான அனுஷியா, உக்ரைன் தலைநகர் கீவ்-வில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.
ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக, அங்கு பயின்று வரும் மாணவர்களை மீட்க மத்திய அரசு ஏற்பாடு செய்த மீட்பு விமானத்தில், டெல்லி வந்த மாணவி அங்கிருந்து கொடைக்கானல் வந்தடைந்தார். மாணவி அனுஷியாவை அவரது பெற்றோர் ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றனர்.