பீஜிங்,-சீனா, 2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை, 7.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம், உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் மோதல் காரணமாக, பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை, சீனா ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
சீன ராணுவத்துக்கு, 2021நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 15.27 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 6.8 சதவீதம் அதிகம். இந்நிலையில், 2022ம் நிதியாண்டுக்கான சீன பட்ஜெட்டில், ராணுவத்துக்கு 17.57.௫௭ லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகம். சீன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ராணுவத்துக்கான நிதி, இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement