பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்து, 56 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அங்கு சிறப்புத் தொழுகை நடந்தது.அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 56 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக வைத்து செயல்படும் துணை அமைப்பான ஐ.எஸ்., கோரசான் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர், மனித வெடிகுண்டாக செயல்பட்டதாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்து, 56 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.