அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சமீபத்தில் உயிரிழந்தார்.
உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக இவர் இருந்தாலும் இவர் வாழும் வரை சர்ச்சை நாயகனாக வலம் வந்தார்.
1994ம் ஆண்டு இலங்கையுடனான டூரில் இவரும் மார்க் வாக் என்பவரும் சேர்ந்து கிரிக்கெட் பெட்டிங் புக்கீகளுக்கு பிட்ச் குறித்த தகவல்களையும், வானிலை குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஷேன் வார்ன், 2003 ஐசிசி உலககோப்பை போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக்கொண்டதாக சர்ச்சை எழுந்தது. அதை தனது உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொண்டதாக அவர் கூறியநிலையில் அவர் மீது 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
ஷேன் வார்ன் மீது அதிகமான பாலியல் புகார்கள் வந்துள்ளன. முக்கியமாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நர்ஸ் ஒருவரை இவர் கூட்டு பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்பட்டது.
ஷேன் வார்ன் திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற நிலையில் கடந்த 2007ம் ஆண்டு இவரது மனைவி இவரை பிரிந்தார். இவர்கள் பிரிந்த செய்தி வைரலாக பரவிய நிலையில் இவர்கள் மீண்டும் ஒன்றினைந்தனர். ஆனால் மீண்டும் ஷேன் வார்ன் வேறு ஒரு பெண்ணிற்கு பிளர்ட்டிங் செய்யும்படியாக அனுப்ப வேண்டிய மெசெஜ்களை தன் மனைவிக்கு அனுப்பியதால் மீண்டும் இந்த ஜோடி பிரிந்தது.
தன் மனைவியை பிரிந்த ஷேன் வார்ன் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் இவருக்கு பிரிட்டிஷ் நடிகை லிஸ் ஹார்லே என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து கொண்டனர். ஆனால் இதற்கிடையில் ஷேன் வார்ன்க்கும் ஒரு ஆபாச பட நடிகைக்கும் தொடர்பு இருப்பது லிஸ்க்கு தெரியவர அவர் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டார்.
கடந்த 2000வது ஆண்டில் பிரிட்டிஷ் நர்ஸ் ஒருவர் தனக்கு ஷேன் வார்ன் ஆபாசமாக மெசெஜ்களை அனுப்பி வருவதாக புகார் அளித்தார்.