புதுச்சேரி அருகே நள்ளிரவில் 5 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து திருடிய மங்கி குல்லா அணிந்த மர்ம மனிதனை காவல்துறையினர் சிசிடிவி உதவியுடன் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை சரவணன் நகரைச் சேர்ந்த குப்புசாமி – சின்னப்பொண்ணு தம்பதியினரின் வீட்டில் சுவாமி படத்தின் கீழே வைத்திருந்த தங்கச் செயின் திருட்டு போய் இருந்தது. அதே போன்று அருகில் உள்ள வீடுகளிலும் துணி,பாத்திரங்கள் உள்ளிட்டவை திருடு போயிருந்தன.
இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர். அப்போது மங்கி குல்லா அணிந்த மர்ம மனிதன் ஒருவன் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.