கியூ: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் டிமித்ரோ குலேபா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ” உக்ரைன் நாட்டில் ஆசியா , ஆப்ரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வர பெரும் உதவியாக இருந்துள்ளோம். வெளி நாட்டு மாணவர்களை நாங்கள் பத்திரமாக வெளியேற்ற சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இன்னும் பத்திரமாக மீட்க ரஷ்யா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது போரில் வெற்றி பெற்றதாக காட்டி கொள்ள ரஷ்யா முயற்சிக்கிறது. நாங்கள் எங்கள் மண்ணை காப்பாற்ற போராடுகிறோம். இந்தியா, சீனா , நைஜீரியா நாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்த கேட்க வேண்டும். தற்போதைய போரை யாரும் விரும்பவில்லை என ரஷ்ய அதிபர் புடினிடம் பேச வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கியூ: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் டிமித்ரோ குலேபா ஒரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.