உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் 3-வது நாடுகள் மூக்கை நுழைத்தார், உக்ரைன் ஒரு நாடு என்ற அந்தஸ்தையே இழக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிரட்டியுள்ளார்.
ரஷ்ய படைகள் நடத்தும் தாக்குதல்களால் உக்ரைன் மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என நேட்டோவிடம் உக்ரைன் கூறியது.
ஆனால் இது போருக்கு வித்திடும் என நேட்டோ ஒதுங்கிக்கொண்டது. இந்நிலையில் உக்ரைன் வான்பரப்புக்கு மூன்றாவது நாடுகள் தடை விதிப்பது, ரஷ்யாவை ஆயுத யுத்தத்திற்கு அழைப்பதற்கு சமம் என புடின் கூறியிருக்கிறார்.
ரஷ்ய பெண் விமானிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் போருக்கான அறைகூவல் போன்றது என்றும், கடவுள் புண்ணியத்தால் அது நடக்கவில்லை என்றும் கூறினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது உக்ரைன் விவகாரத்தில் மூன்றாவது நாடுகள் தலையிட்டால், உக்ரைன் நாடு என்ற அந்தஸ்தை இழக்கும் என மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையில் உக்ரைன் மீதான தாக்குதலை 11வது நாளாக ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது.