புதுடெல்லி,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி 6-7 (3-7), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் பிரடெரிக் நீல்சன், மைக்கேல் டார்பேகார்ட் இணையை வீழ்த்தியது.
அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 5-7, 7-5, 10-7 என்ற செட் கணக்கில் ஜோக்னெஸ் இங்கில்செனை சாய்த்தார். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி உலக குரூப்-1 சுற்றில் நீடிக்கிறது.