தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப்
மாநிலத்தில், மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகளில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,
தேர்தல் பணி
ஒதுக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்களில், சுமார் 92 ஊழியர்கள், தேர்தல் பணிகளுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை கேட்டு 25 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் பணிகளுக்கு வரத் தவறிய அரசு ஊழியர்களுக்கு, பிப்ரவரி மாதம் 19 மற்றும் 20 ஆகிய நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது எனத் தெரிகிறது.
இதற்கிடையே, தேர்தல் பணிகளுக்கு வரத் தவறிய
அரசு ஊழியர்கள்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அளிக்கும் விளக்கம் சரியாக இல்லாத பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.