புனே: மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது பெரிய நாடாக திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் இந்தியாவின் சாதனைகளை பற்றி பேசினார். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதன் காரணத்தால் போரால் உக்ரைனில் பாதிக்கப்பட்ட நமது நாட்டின் மாணவர்களை எளிதாக மீட்க முடிந்ததாக கூறினார்.மென்பொருள் முதல் சுகாதாரம் வரை, செயற்கை நுண்ணறிவு முதல் மின்சார வாகனம் வரை, ட்ரோன்கள் முதல் செமிகண்டக்டர்கள் வரை என ஒவ்வொரு துறையிலும் அரசு சீர்திருத்தங்களை கொண்டுவந்து இளைஞருக்கான புதுப்புது வாய்ப்பு கதவுகளை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளின் எண்ணிக்கை வெறும் 2-ஆக இருந்ததாகவும் தற்போது 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகள் பெருகிவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் உலகிலேயே மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடக திகழ்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.