தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 196 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று இன்று 200க்கும் கீழ் குறைந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,770 ஆக குறைந்தது. தொற்றில் இருந்து 554 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,015 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்..
சோதனைகள், அவதூறுகளை கடந்து மக்களின் பேரன்போடு சாதனைகள் படைத்துள்ளோம்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்