மொஹாலி:
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுது தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி, போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பின் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார். குறிப்பாக பேட்டிங்கில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சிலும் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் வெறும் 174 ரன்களுக்கே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.