நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 2018 அம ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஜான்வி. அதைத்தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமானார்.
தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில்
நயன்தாரா
நடிப்பில் வெளியான
கோலமாவு கோகிலா
படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார் ஜான்வி. பாலிவுட்டில் வலம் வரும் இளம் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஜான்வி தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார்.
ஆண்களையும் அதற்கு அழைக்கும் பிரபலங்கள்…பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்..!
இந்நிலையில் இன்று அவர் தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிய ஜான்வி திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் புகைப்படம் சமூகத்தளங்களில் செம வைரலாகிவருகின்றது. மற்ற நடிகர் நடிகைகளை போல் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடுவது ஒருபுறமிருக்க ஜான்வி கோவிலுக்கு தனது நண்பர்களுடன் பிறந்தநாளன்று சாமி தரிசனம் செய்யவந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்கு வெளியில் வரும்போது சாலையில் நடந்த ஒரு விபத்தை பார்த்து ஜான்வி அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்கு வெளியில் தனது நண்பர்களுடன் வந்த ஜான்வி எதோ ஒரு விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் இதைப்பற்றிய விரிவான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!