உக்ரேனின் நிலவும் யுத்த நிலைமை சர்வதேச பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அந்நாட்டின் எதிர்காலம் நம்பிக்கையற்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
பொருளாதார பாதிப்பு தற்போது பாரியளவில் காணப்படுகின்றது. விசேடமாக ரஷ்யாவுக்கு எதிரான செயற்பாடுகள் பாரிய தடைகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
உக்ரேன் மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நாடுகளுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. யுத்தத்;தை முன்னெடுக்கத் தூண்டுவோரின் செயற்பாடுகளை சீனா கண்டித்துள்ளது.