நியூயார்க்,
ரஷியாவின் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக உக்ரைனின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர வெளிநாட்டினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈராக், போஸ்னியா ஆகிய நாடுகளில் போர் முனையில் சண்டையிட்ட அனுபவமுடையவர்கள் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவை தவிர, ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் உக்ரைனின் சர்வதேச பாதுகாப்பு படையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.