சியோமியின் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட், மூன்று லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் இந்த
போக்கோ எம்4 ப்ரோ
ஸ்மார்ட்போன் களம்கண்டுள்ளது.
இதன் விற்பனை இன்று முதல் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் தொடங்கியுள்ளது. சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டாலும், புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை.
Moto குடும்பத்தின் G22 ஸ்மார்ட்போன் வெளியீடு – பயனர்களை கவரும் புதிய டிசைன்; 4 ரியர் கேமரா!
போக்கோ எம்4 ஸ்மார்ட்போன் அம்சங்கள் (poco m4 pro specifications)
Poco M4 Pro ஸ்மார்ட்போன் 6.4″ அங்குல முழு அளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 180Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதள அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.
போக்கோ எம்4 ப்ரோ செயல்திறனை பொருத்தவரை, மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலி கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. UFS2.2 மெமரி ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6ஜிபி, 8ஜிபி ஆகிய இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
போக்கோ எம்4 ஸ்மார்ட்போன் கேமரா (Poco m4 pro camera)
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மை சென்சாராக 64 மெகாபிக்சல் கேமராவும், கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸும், ஒரு 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகள், செல்பி மற்றும் முகத்தை கொண்டு போனை திறக்க 16 மெகாபிக்சல் கேமராவை முன்பக்கத்தில் போக்கோ எம்4 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
போக்கோ எம்4 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்கும் 33W பாஸ்ட் சார்ஜர் போனின் கூடவே வழங்கப்படுகிறது. வைஃபை, ப்ளூடூத் 5.1, இன்பிராரெட் சென்சார், டைப்-சி, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் தன் வசம் கொண்டுள்ளது.
Flipkart Offer – மலிவு விலையில் Apple iPhone வாங்க நல்ல வாய்ப்பு!
போக்கோ எம்4 விலை (Poco m4 pro price in India)
பவர் பிளாக், கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். இதன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.17,999 ஆக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகையாக 1000 ரூபாய் தள்ளுபடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது, HDFC கடன் அட்டைகள், அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் உடனடி தள்ளுபடியாக ரூ.1000 கிடைக்கிறது.
Read more:
கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல்மார்ச் 8 அன்று சாம்சங் கேலக்ஸி F23 5g போன் அறிமுகம்Asus விவோபுக் 2 இன் 1 லேப்டாப் அறிமுகம்