ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, அக்கா உங்கள் முகத்தை பார்த்தாலே பாவமாக இருக்கிறது. மனஅழுத்தத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது. அதனால் தயவு செய்து ஓய்வு எடுங்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்
தனுஷ்
வீட்டில் இருந்து ஆறுதல் வந்திருக்கிறது. செல்வராகவனின் மனைவி
கீதாஞ்சலி
தான் கமெண்ட் போட்டிருக்கிறார்.
விரைவில் நலம் பெறுக. கோவிடுக்கு பிறகு உடம்பே மாறிவிடுகிறது என தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவை போன்றே கீதாஞ்சலியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா என்ன செய்தாலும் ஆதரவு அளிக்கிறார் கீதாஞ்சலி. இந்நிலையில் தான் ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ராதிகா சரத்குமாரோ, மருத்துவமனையில் இருந்து தான் எனக்கு போன் செய்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து தான் முசாபிருக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறீர்களா அண்ணி என தனுஷ் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.