கஜகஸ்தான்,
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா போரை நிறுத்தவில்லை. இதனால், பல நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத்தடைகள் விதித்து வருகின்றன. மேலும் ரஷியாவிற்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவின் கொடூர தாக்குதலை கண்டித்து கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் சோவியத் ஒன்றிய நிறுவனர் விளாடிமிர் லெனின் சிலை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரஷியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.