கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் ஹெலிகொப்டரில் மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக தென்னிலங்கை மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில், எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, ஹெலிகொப்டர் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்து சுற்றி திரிவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,
குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த போது, அப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று மிக தாழ்வாக பறந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அந்தப் பகுதியில் கூடியிருந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பொது மக்களுக்கு 1000 ரூபாய்க்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றது. எனினும் பிரபுக்களுக்கு லட்ச கணக்கில் எரிபொருள் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் தாம் அதிகாலை 5 மணி முதல் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் நிற்பதாகவும் மாலை வரையில் பசியுடன் நின்று எரிபொருள் பெற்றுச் செல்வதாகவும் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.
உண்மையில், இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் ஹெலிகொப்டரில் மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக அவர்கள் கடுமையாக பேசியுள்ளனர்.