கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சேவை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அமைச்சு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த பதற்றமான சூழல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில் குறித்த கட்டடம் பல உரிமையாளர்களைக் கொண்டது எனவும், இரு உரிமையாளர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலேயே இந்த சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.