நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து 17 நாடுகளை நீக்கிய ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடை விதித்தது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் ரஷ்யாவிற்கு எதிராகவும் சில நாடுகள் ஓட்டளித்தன.

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, உக்ரைன், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், நார்வே, தென்கொரியா, தைவான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.