மாரி செல்வராஜின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய 'மாமன்னன்' படக்குழு: வடிவேலு மிஸ்ஸிங்..!

‘பரியேரும் பெருமாள்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தன்னுடைய இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார்
மாரி செல்வராஜ்
. இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சனரீதியாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாரி செல்வராஜுக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தனுஷுடன் , ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணுவே, இந்தப்படத்தையும் தயாரிருந்தார்.

பலவித சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக தனுஷ் தெரிவித்திருந்தார்.

அவரே இல்லன்னு ஆகிருச்சு.. அப்புறம் இது எதுக்கு: பிரிவிற்கு பின் சமந்தா செய்த காரியம்..!

இந்நிலையில் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ‘
மாமன்னன்
’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்
வடிவேலு
, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இசைப்புயல்
ஏ.ஆர். ரஹ்மான்
இசையமைக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். இந்நிகழ்வில்,
உதயநிதி ஸ்டாலின்
, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.