பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்த நிலையில் அங்கு ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 59 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 70 இடங்களில் வெற்றி பெறும் என்று Times Now கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் – 22, சிரோமணி அகாலிதளம் -19, பாஜத -5 பிற கட்சிகள் – 1 இடத்திலும் வெற்றி பெறும் என்று அந்த கருத்துக் கணிப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி -58, காங்கிரஸ் -26, சிரோமணி அகாலி தளம் -24, பாஜக -3, இதர கட்சிகள் -6 இடங்களையும் கைப்பற்றும் என்று Axis My India கணித்துள்ளது.
ஆம் ஆத்மி -58, காங்கிரஸ் -25, சிரோமணி அகாலி தளம் -23, பாஜக – 10, இதர கட்சிகள் – 3 இடங்களிலும் வெற்று பெறும் என்பது C-Voter கணிப்பாக உள்ளது.
ஆம் ஆத்மி -66, காங்கிரஸ் -26, சிரோமணி அகாலி தளம் -19, பாஜக – 4, இதர கட்சிகள் – 2 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று Poll of Polls கணித்துள்ளது.
அனைத்து கருத்துக் கணி்ப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளதால் தேர்தல் முடிவுகளும் இக்கருத்து கணிப்புகளை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.