ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடையா? அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், 
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்  வாங்குவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்  இறக்குமதியை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கா வெள்ளை மாளிகையின்  பத்திரிக்கை செயலாளர் ஜென் சாக்கி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது , “ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு தடை விதிப்பது குறித்த எந்த ஒரு முடிவையும் இது வரை அதிபர் ஜோ பைடன் எடுக்கவில்லை. 
ஆனால் எங்கள் உள்வட்டாரங்களிலும், பிற ஐரோப்பிய நட்பு நாடுகளுடனும் அது பற்றிய ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கச்சா எண்ணெய்  விலையை கட்டுக்குள் வைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அமெரிக்காவின் இறக்குமதி சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் முதல் ஒரு ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருள்களை  விட தற்போது அதிக அளவிலான எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி வெனிசுலாவில் இருந்து கச்சா என்னை இறக்குமதி செய்வது குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.