கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் (பிப்ரவரி) 11ந்தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடரும் இதுபோன்ற சிக்கலை போக்க, மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமான தீர்வை அமைத்து தரவும் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.