அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது மார்ச் 15 மற்றும் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நிபுணர்கள் நடப்பு ஆண்டில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 5 முறையேனும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் பிரபலமான நிதி நிறுவனமான வெல்ஸ் பார்கோ இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம், அமெரிக்கா பங்கு சந்தைகளில் மதிப்பீடுகள் கவர்ச்சிகரமானவை. இது நல்ல தரமான பங்குகளில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகளை வழங்கலாம் என கூறியுள்ளார்.
நிச்சயமற்ற நிலை
சர்வதேச அளவில் பங்கு சந்தைகளானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், மிக குறைந்த லெவலில் உள்ளன. பல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட குறைவாக உள்ளன. தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றன.
5 முறை வட்டி அதிகரிப்பு
எனினும் அமெரிக்க மத்திய வங்கியானது பொருளாதார வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள, நடப்பு ஆண்டில் 5 முறை வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என வெல்ஸ் ஆய்வாளர் கூறியுள்ளார். குறிப்பாக வரவிருக்கும் வாரத்தில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தை வீழ்ச்சி காணலாம்
அமெரிக்க மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையினால் வளர்ந்து வரும் சந்தைகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பங்கு சந்தைகளில் பெரும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெடரல் வங்கியின் இந்த நடவடிக்கையினால் இந்திய பங்கு சந்தையில் இருந்து பெரியளவிலான முதலீடுகள் வெளியேறலாம். இது சந்தை சரிவுக்கு காரணமாக அமையலாம். ஆக முதலீட்டாளர்கள் இந்த சமயத்தில் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
இந்தியாவினையும் அதிகரிக்க தூண்டலாம்
மேலும் வலுவடையும் டாலரின் மதிப்பினால் அன்னிய வணிகம் மேம்படும். இது அமெரிக்காவின் தேவையை மேம்படுத்தும். வணிகத்தினை ஊக்குவிக்கும். இது நிறுவனங்களின் லாபத்தினை ஊக்குவிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வளர்ந்து வரும் நாடுகளையும் (இந்தியா போன்ற) வட்டி விகிதத்தினை இது அதிகரிக்க தூண்டும். இது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை ஊக்குவிக்கும்.
ஏற்றுமதி நாடுகள் பலன்
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் பட்சத்தில், அமெரிக்காவிடம் ஏற்றுமதியை சார்ந்திருக்கும் வளர்ந்து வரும் நாடுகள் பலனடையலாம். அதேசமயம் இறக்குமதியாளார்கள் கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம். இது அன்னிய செலவாணியை அதிகரிக்கலாம்.
How to Rising US interest rate affect India?
How to Rising US interest rate affect India?/5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?