கீவ்: ‛‛ யாரைக்கண்டும் பயமில்லை. கீவ் நகரில் தான் தங்கி உள்ளேன்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 13வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும், உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து தலைநகர் கீவ் நகரில் தங்கி உள்ளார். தொடர்ந்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் மக்களிடம் பேசி வருகிறார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது: நான் கீவ் நகரின் பன்கோவா தெருவில் தான் தங்கியுள்ளேன். மறைந்து வாழவில்லை. யாரை கண்டும் பயமில்லை. தேசப்பற்று மிக்க இந்த போரில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். புடினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் கீவ்வில் தான் இருக்க போகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கீவ்: ‛‛ யாரைக்கண்டும் பயமில்லை. கீவ் நகரில் தான் தங்கி உள்ளேன்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது தொடர்ந்து 13வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.