தங்கத்தினை பிடிக்காதவர்கள் உண்டா? என்றால் நிச்சயம் இருக்காது. அவரவர் அவரது நிதி நிலைக்கு ஏற்பட , கொஞ்சமேனும் வாங்கி விட வேண்டும் என நினைப்பர். அதிலும் தற்போதைய காலகட்டங்களில் ஆபரண தங்கத்தின் தேவை மட்டும் அல்லாது, முதலீட்டு ரீதியாகவும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அப்படிப்பட்ட தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும்போது தொடர்ந்து ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?
இந்த நிலையில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும் கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? முக்கிய லெவல்கள் என்ன என்று அபான்ஸ் குழுமத்தினை சேர்ந்த EVP & கேப்பிட்டல் & கமாடிட்டி சந்தையின் தலைவர மகேஷ் குமாரிடம் பேசினோம்.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையானது, முதலீட்டு ரீதியாக அதிகரித்துள்ளது. இந்த பதற்றமான நிலையானது இன்னும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது விலையுயர்ந்த புல்லியன்களுக்கு ஆதரவாக அமையலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமூக நிலை எட்டப்படுமா?
இப்போர் ஒரு வேளை முடிவுக்கு வரவேண்டுமெனில் ரஷ்யா – உக்ரைன் இடையில் சுமூக நிலையானது எட்டப்பட வேண்டும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில், உக்ரைன் தங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார். அதே சமயம் உக்ரைனோ இதனை ஏற்காது என்றும் கூறியுள்ளது.
பணவீக்கம்
தங்கம் விலையினை மேலும் ஊக்குவிக்கும் விதமாக 10 வருடங்களில் இல்லாதளவுக்கு பணவீக்கம் உச்சத்தினை எட்டியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம். இது தொடர்ந்து பல்வேறு கமாடிட்டிகளின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமாடிட்டி இன்டெக்ஸ்
கொரோனாவின் வருகைக்கு பிறகு ப்ளூம்பெர்க் கமாடிட்டி இன்டெக்ஸ் 2021ல் 27.1% உயர்ந்தது. இது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதே 2022ல் இதுவரை34.98% அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகிறது.
முக்கிய சப்போர்ட் லெவல்
இதற்கிடையில் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தங்கத்தின் உடனடி சப்போர்ட் லெவல் 1984 – 1970 டாலர்களாக இருக்கலாம். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 2032 – 2057.5 டாலராக இருக்கலாம் என கூறியுள்ளார்.
Russia – ukraine crisis may pull up gold price
Russia – Ukraine crisis may pull up gold price/தங்கம் விலை ஏற்றம் காணலாம்.. நிபுணரின் பளிச் கணிப்ப பாருங்க..!