உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்ற, ரஷய் அதிபர் புடின் வெளிநாட்டு போராளிகளை நாடியுள்ளார்.
ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிரியர்களின் எண்ணிக்கையை தங்களால் வழங்க முடியவில்லை என்று மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
இதனிடையே, சமீபத்திய நாட்களில் ரஷ்ய ராணுவம் சிரியாவில் இருந்து போராளிகளை ஆட்சேர்ப்பு செய்து வருவதாகவும், நகர்ப்புற போரில் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், கீவ்வை உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற உதவுவார்கள் என்று ரஷ்ய நம்புவதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
அதேசமயம், சிரியாவில் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ‘உக்ரைனுக்குச் சென்று காவலர்களாகச் செயல்பட’ 200 டொலர் முதல் 300 டொலர் வரையிலான சம்பளத்தை ரஷ்யா வழங்கியது என சிரிய ஆர்வலர் நடத்தும் Deir Ezzor 24 செய்தி நெட்வொர்க் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது நினைவுக்கூரத்தக்கது.