அவ்ளோ அழகுங்க இந்த SAMSUNG 5G போன் – ஸ்பெக்கும் டாப் டக்கர்!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தனது எஸ் ரக பிளாக்‌ஷிப் தொகுப்பான சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் டேப்லெட்டுகளையும் அறிமுகம் செய்தது.

முன்பெல்லாம் பயனர்களை சோதிக்கும் வகையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இருக்கும். ஆனால், தற்போது சீன நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில், அதிக தரத்துடன் இந்திய டெக் சந்தைக்குக் கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது மிட் ரேஞ் பயனர்களுக்காக புதிய 5ஜி போனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி F23 5ஜி என பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்மார்ட்போன், இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை Flipkart ஷாப்பிங் தளத்தில் மார்ச் 16ஆம் தேதி தொடங்குகிறது

Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத அடிச்சுக்க முடியாது!

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F23 5G features)

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. இது எல்சிடி பேனலால் ஆன டிஸ்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. 401ppi பிக்சல் அடர்த்தியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் அடிப்படையில் ஒன் யுஐ 4 (One UI 4) ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், ஆண்ட்ராய்டு 14 வரையிலான அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி (
Snapdragon 750G
) சிப், இரண்டு கோர்டெக்ஸ்-ஏ77 சிபியு கோர்கள் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஆறு கார்டெக்ஸ் ஏ55 சிபியு கோர்கள் 1.8ஜிகாஹெர்ட்ஸ், அட்ரினோ 619 கிராபிக்ஸ் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

YouTube அறிமுகப்படுத்தும் புதிய Share Clips வசதி – எப்படி பயன்படுத்துவது!

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி கேமரா (Samsung Galaxy F23 5G camera)

இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட டிரிப்பிள் ரியர் அமைப்பு உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகிய மூன்று கேமராக்கள் அடங்கும்.

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா முன்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா முன் பக்கம் உள்ள வாட்டர் டிராப் நாட்சில் பொருத்தப்பட்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி பேட்டரி (Samsung Galaxy F23 5G battery)

அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), பழைய வெர்ஷன் ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க பாஸ்ட் சார்ஜிங் அடாப்டரும் போனுடன் வருகிறது. இதற்கு டைப்-சி போர்ட் ஆதரவாக இருக்கும்.

ஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடு – இதில் எந்த மொபைல் சிறந்தது?

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி விலை (samsung galaxy f23 5g price in india)

பாரஸ்ட் கிரீன், ஆக்வா ப்ளூ ஆகிய இரு வண்ணத் தேர்வுகளின் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதில் 4ஜிபி, 6ஜிபி ஆகிய இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. நீட்டிக்கக்கூடிய விர்ச்சுவல் ரேம் அம்சமும் இதில் உள்ளது. மேலும், ஸ்டேரேஜ் மெமரிக்காக 128ஜிபி கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.15,999ஆக உள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ரூ.14,999க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தின் மூலமாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 16ஆம் தேதி பகல் 12 மணிக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. Flipkart Axis Bank கிரெடிக் கார்ட் உள்ளவர்களுக்கு 5% விழுக்காடு நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஐசிஐசிஐ வங்கி பயனர்களுக்கு ரூ.1000 கேஷ்பேக் கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.