இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருவரும் இணைந்து கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டி விட்டனர். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து கேக் வெட்டி பெண் நிர்வாகிகளுக்கு ஊட்டினர்…#மகளிர்தினம் #அதிமுக pic.twitter.com/xZbjLzwIHw
— விஜய்பதி (@vijipriyan25) March 8, 2022
சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்றதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர் ராஜா இருவரும் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.