கேரள முதல் பெண் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நியமனம்| Dinamalar

திருவனந்தபுரம்:கேரளாவில் செயல்படும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் பெண் டிரைவர்நியமிக்கப்பட்டு உள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களின் உயிர்காக்கும் பணியில், ‘108’ ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது.
இவற்றில், ஆண்கள் மட்டுமே டிரைவர்களாக உள்ளனர்.இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த தீபாமோள் என்பவர், ஆம்புலன்ஸ் டிரைவராக நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில், தீபாமோளிடம் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கிய மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:பல்வேறு மாவட்டங்களிலும், ஆர்வமுள்ள பெண்களை ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.