துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… இந்த ரகசியம் இதுவரை தெரியாமப் போச்சே!

வளர்ந்து வரும் விஞ்ஞான காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்வது அவர்களுக்கு இணையாக அனைத்து பணிகளையம் மேற்கொள்வது என சாதித்து வருகின்றனா. ஆனாலும் வீட்டு வேலைகள் மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது போன்று அந்த வேலைகளில் ஆண்கள் தலையிடுவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பெண்களின் நேரம் வீட்டு வேலைகளிலேயே பாதி கழிந்துவிடுகிறது. ஆனால் இந்த சில புத்திசாலிதனமாக ஐடியாக்கள் மூலம் பெண்கள் தங்கள் நேரத்தை அதிமாக மிஞ்சப்படுத்தலாம்.

ஐடியா -1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்படுத்தினால், விரைவாக சோர்வடையும் நிலை ஏற்படும்.

ஐடியா –2 : முட்டை அவிக்கும்போது குறுகிய பாத்திரத்தை பயன்படுத்தலாம். இதனால் முட்டை எளிதில் உடையாது. முட்டை வேகும்போது சிறிது சோடா உப்பை பயன்படுத்தினால் முட்டை பதமாக வேகும்.

ஐடியா -3 :ரசம் வைக்கும்போது புளி கரைசலை ஊற்றுவதற்கு முன்பு மற்ற பொருட்கைளை எல்லாம் கொதிக்கை வைத்து பச்சை வாசனை போன பின்னர் புளி கரைசலை ஊற்றினால், சூப்பரான மற்றும் சூப் போன்ற ரசம் கிடைக்கும்.

ஐடியா -4 : வாணலியில் எண்ணெய்விட்டு வெங்கயம் பச்சை மிளகாய், தக்காளி, ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கி சூடான சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம். உடனடி சாதம் ரெடி

ஐடியா -5 டீ போடும்போது சிறிது இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து குடித்தால், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வாக அமையும்

ஐடியா -6 : இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேகவைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும் துணி கழுவுவதற்கும் எளிதாக இருக்கும்

ஐடியா -7 : சைவ மற்றும் அசைவ வகை குருமா வகைகளுக்கு தேங்காய் சேர்ப்பது மட்டுமல்லாமல்,  சீரகம் தேங்காய் மிளகு சேர்த்த அரைத்து சேர்த்தால், அசைவம் சுவையாக இருக்கும்.

ஐடியா -8 : வீட்டில் பள்ளிகள் தொல்லை இருந்தால், பல்லி வரும் இடத்தில் மயில் தோகைகளை வைத்தால், அந்த பக்கம் பல்லிகள் வராது

ஐடியா -9 : மோர் குழம்பு செய்யும்போது அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க வைத்தால் மோர் திரியாமல் இருக்கும். அரைத்த விழுதினை வதக்காமல் மோரில் ஊற்றினால், மோர் திரியாமல் இருக்கும்.

ஐடியா -10 : கோதுமை மாவுடன் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்தால், சப்பாத்தி மாவு மிகவும் மிருவாக கிடைக்கும. மேலும் நீண்ட நேரத்திற்கு மிருதுவாகவும், சப்பாத்தி பஞ்சு போலவும் கிடைக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.