சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “மகளிர் தினத்தில், பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
இந்திய அரசு தனது பல்வேறு திட்டங்களின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி, கண்ணியம் மற்றும் வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இந்த முயற்சிகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதேபோல, `வளர்ச்சிக்கான நிதியுதவி மற்றும் விருப்பத்துக்குரிய பொருளாதாரம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர் “ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்த ஆண்டு முற்போக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பெண் நிதியமைச்சர் இந்தியா போன்ற பெரிய நாட்டில் இருப்பது பெருமைக்குரியது” என்றார்.
நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1 -ம் தேதி தனது நான்காவது நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.