15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.
மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் , யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் .
புதிய கேப்டனை மார்ச் 12ம் தேதி அறிவிக்கிறது பெங்களூரு அணி நிர்வாகம். .விராட் கோலிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறர்கள் .
இந்நிலையில் பெங்களூரு அணிக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த (முன்னாள் சென்னை அணி வீரர் ) டு பிளெஸ்சிஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு அணி டு பிளெஸ்சிசை ரூ 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது