தஞ்சாவூர் : ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் 15 இடங்களில் பாமக 4 இடங்களிளும், திமுக 4 இடங்களிளும், அதிமுக 2 இடங்களிளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1, சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பேரூராட்சி தலைவராக வேண்டுமெனில் 8 பேரின் ஆதரவு தேவை. பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும், மதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும் களமிறங்கினர்.
இதற்கிடையே ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்த 3 கவுன்சிலர்களை காணவில்லை என திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதில், பாமக பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளதாகவும், தேர்தலை நிறுத்த திமுகவினர் நாடகமாடுவதாக பாமவினர் குற்றச்சாட்டு முன்வந்து போராட்டம் நடத்திவந்தனர். இதன்காரணமாக ஆடுதுறை பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கக்கூடிய மறைமுகத் தேர்தல் தேர்தலை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.! ஜெய்பீம் விவகாரத்தில் புதிய திருப்பம்.! #JaiBhim #Suriya𓃵 #Cinema #Kollywood #Vanniyar #PMK #EtharkumThunindhavan #ET #Chennai #Seithipunal #TamilNaduhttps://t.co/zEvmbslQzK
— Seithi Punal (@seithipunal) March 9, 2022