ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட கோபத்தில் புதின்..!!

ரஷ்யா உக்ரைன் மீதான போர் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் பல சேவை, வர்த்தகத்திற்குத் தடை விதித்தாலும் யாரும் இதுவரை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடை விதிக்கவில்லை.

இந்நிலையில் முதல் நாடாக அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய், எரிவாயு மீது தடை விதித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா அமெரிக்காவை இந்த விஷயத்தில் எச்சரித்த நிலையிலும் ஜோ பைடன் அரசு தடை விதித்துள்ளது ரஷ்யா உக்ரைன் போரை தாண்டி மிகப்பெரிய வர்த்தகப் போருக்காகத் தளத்தை உருவாக்கியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரால் டிசிஎஸ் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்-க்கு புதிய பிரச்சனை..!

 ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷ்ய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உடனடியாகத் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதேபோல் அமெரிக்கத் துறைமுகத்தில் இனி ரஷ்ய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரிக்கு இடமில்லை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பிரிட்டன் அரசு

பிரிட்டன் அரசு

இதேவேளையில் பிரிட்டன் அரசு 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி படிப்படியாகக் குறைத்து முழுமையாகத் தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கத் தனது நடப்பு நாடுகள் உடன் இதுகுறித்த பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.

 அமெரிக்க - ரஷ்யா
 

அமெரிக்க – ரஷ்யா

2021 ஆம் ஆண்டில், அமெரிக்கா சராசரியாக 209,000 பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 500,000 பேரல் மற்ற பெட்ரோலிய பொருட்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இது அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 3 சதவீதத்தையும், அமெரிக்கச் சுத்திகரிப்பு நிலையங்களால் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்பட்டு உள்ள மொத்த கச்சா எண்ணெய்யில் 1 சதவீதத்தையும் குறிக்கிறது. ரஷ்யாவைப் பொறுத்தவரை, இது அதன் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் ஏற்றுமதி 3 சதவீதமாகும்.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இதன் மூலம் இன்று கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 125.5 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 132 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து பிற நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யைத் தடை செய்தால் இதன் விலை 160 டாலர் முதல் 200 டாலர் வரையில் உயர அதிக வாய்ப்பு உள்ளது.

 வேண்டாத வேலை..

வேண்டாத வேலை..

அமெரிக்கா ஏற்கனவே 40 வருட உச்ச அளவான 7.9 சதவீத பணவீக்கத்தில் இருக்கும் நிலையில், இந்தக் கச்சா எண்ணெய் தடை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா கச்சா எண்ணெய் வாங்கவில்லை எனில் ரஷ்யா என்ன செய்யும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Joe Biden’s US Govt bans Russian oil; Oil price may cross 160 dollars sooner

Joe Biden’s US Govt bans Russian oil; Oil price may cross 160 dollars sooner ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட கோபத்தில் புதின்..!!

Story first published: Wednesday, March 9, 2022, 12:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.