சென்னை: கடந்த 9மாதமாக பரோலில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகட்ள கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது. இடையிடையே பரோலில் அவர்களில் சிலர் வெளியே வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. முதன்முதலாக தமிழக அரசு 2021ம் ஆண்டு மே 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. அதுமுதல் தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை, அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்
. அவரது மனுமீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.