தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.
பிரிவுக்கு பிறகு அவரவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனுஷை பிரிந்த பிறகு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மகிழ்ச்சியான போஸ்ட்டுகளாக போடுகிறார் ஐஸ்வர்யா.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் நிலையில் சிரித்த முகமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா மருத்துவமனையில் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட நிலையில், தன் நான்கு செல்ல நாய்களுடன் இருக்கும் ஹேப்பி புகைப்படத்தை வெளியிட்டார்
தனுஷ்
.
Aishwaryaa:ஒரே லவ்: குஷியில் ஐஸ்வர்யா, குவியும் வாழ்த்து
நீ இல்லாட்டியும் நான் சந்தோஷமா இருக்கேன் பாத்தியா என்பது போன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த இன்ஸ்டா சண்டை எங்கு போய் முடியப் போகிறதோ என்கிறார்கள்.
இதை எல்லாம் பார்த்தால் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்வதாக தெரியவில்லை. இதற்கிடையே சீக்கிரமாக சேர்ந்துவிடுமாறு ஐஸ்வர்யாவிடம் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.