லாகூர்: தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில், பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக் கொன்ற தந்தையை, போலீசார் தேடி வருகின்றனர்.
அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான்வாலியை சேர்ந்தவர் ஷஜாய்ப் கான். மஷல் பாத்திமா என்பவரை திருமணம் செய்த அவர், தனக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், கர்ப்பிணியாக இருந்த பாத்திமாவுக்கு, கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்த ஷஜாய்ப் கான், தாயையும், குழந்தையையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பிய அவர், அலமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்து, பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் குழந்தை இறந்தது. அதிர்ச்சியடைந்த பாத்திமா, இது பற்றி போலீசில் புகார் செய்தார். ஷஜாய்ப் கானை போலீசார் தேடி வருகின்றனர்.
லாகூர்: தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில், பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக் கொன்ற தந்தையை, போலீசார் தேடி வருகின்றனர்.அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.