உக்ரைனில் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கம் ஆபரேஷன் கங்கா என்ற துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கியிருக்கும் அண்டை நாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அரசின் மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியா தான் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளது. பிரதமர் மோடி இது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிபர்களுடன் பேசினார். இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி இரவும் பகலும் உழைத்தார். ஆனால், உக்ரைன் விவகாரத்தில் மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களையும் நாங்கள் அழைத்து வந்திருக்கிறோம்” என்றார்.