மூன்று முறையல்ல… உக்ரைன் ஜனாதிபதி தொடர்பில் பகீர் தகவலை வெளியிட்ட அதிகாரி


உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய கடந்த இரண்டு வாரங்களில் ஒரு டசின் முறைக்கு மேல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கொல்ல முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மிக நெருக்கமான நபரே உறுதி செய்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கும் Mikhail Podolyak என்பவரே,

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3 முறை கொலைமுயற்சியில் இருந்து தப்பியதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும்,
கடந்த இரண்டு வாரத்தில் ஒரு டசின் முறைக்கும் மேல் ரஷ்ய உளவாளிகள் மற்றும் கூலிப்படைகளால் கொலைமுயற்சியை எதிர்கொண்டார் என்ற பகீர் தகவலை உறுதி செய்துள்ளார்.

மட்டுமின்றி, தலைநகர் கீவ்வுக்குள் புகுந்துள்ள ரஷ்ய உளவாளிகளால் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்படலாம் என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அரசாங்கம் கட்டுக்கோப்பான உளவுத்துறையை கட்டமைத்துள்ளதால், இதுவரையான அனைத்து கொலைமுயற்சிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் Mikhail Podolyak.

ஆனால், கடந்த ஒருவாரத்தில் மட்டும் முன்று முறை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உயிர் தப்பினார் என்பதும் உண்மையே என குறிப்பிட்டுள்ளார் அவர்.
இதற்கு ரஷ்ய தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் அளித்த தகவலே காரணம் என குறிப்பிட்டுள்ள அவர், மூன்று தருணங்களும் மிக நெருக்கமான கட்டத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிலையில் தான், ரஷ்யா உடனான உயரடுக்கு சந்திப்பில் கலந்துகொண்ட உக்ரைன் அதிகாரி ஒருவர், தேசதுரோகி என அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளால் கைதாகி, பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.