நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவினருக்கு 25 வயது, மற்ற இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயது என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு, தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மருத்துவம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், நாட்டில் மருத்துவக் கல்வியை வலுப்படுத்த உதவும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாணடவியா தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.