ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்-க்குத் தடை விதித்துள்ளது, பிரிட்டனும் படிப்படியாகக் குறைக்க முடிவு எடுத்துள்ளது.
இதற்கிடையில் ஐரோப்பா போதுமான கச்சா எண்ணெய், எரிபொருள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இந்த வர்த்தக வாய்ப்பை சரியான நேரத்தில் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரஷ்யா – உக்ரைன் போரால் டிசிஎஸ் விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்-க்கு புதிய பிரச்சனை..!
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத்தில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளது. இந்தச் சுத்திகரிப்பு ஆலையில் மெயின்டனென்ஸ் பணிகள் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு உள்ள பாதிப்பை வர்த்தகமாக மாற்ற மெயின்டனென்ஸ் பணிகளை ஒத்திவைத்துள்ளது.
மெயின்டனென்ஸ் பணிகள்
ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் தயாரிக்கப்படும் எரிபொருள் ஏற்கனவே ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மெயின்டனென்ஸ் பணிகள் ஒத்திவைக்கப்படும் காரணத்தால் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் அளவு வரும் வாரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சுத்திகரிப்பு ஆலை
குஜராத்தில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஒரு நாளுக்கு 1.36 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் பெரும்பகுதி எரிபொருள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யும் தகுதி உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி கனவு
கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து ரிலையன்ஸ் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் இருந்து ஒரு நாளுக்கு 704,000 பேரல் கச்சா எண்ணெய் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்து வருகிறது. ஆனால் முக்கால்வாசி தொழிற்சாலை மட்டுமே இயங்கும் வரையில் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை
தற்போது உருவாகியுள்ள வர்த்தக வாய்ப்பு மூலம் ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை 100 சதவீதம் இயங்குவது மட்டும் அல்லாமல் மொத்த உற்பத்தியில் 80 சதவீதம் வரையில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை பெற உள்ளது.
அதிக லாபம், அதிக வளர்ச்சி
இதுமட்டும் அல்லாமல் தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருக்கும் காலத்தில் விநியோகம் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த முடிவு அதிகப்படியான லாபத்தை அளிக்கும். இதனாலேயே ரிலையன்ஸ் பங்குகள் 5.49 சதவீதம் உயர்ந்து 2,358.30 ரூபாய் உயர்ந்துள்ளது.
Jackpot for Mukesh Ambani: Reliance Inds Supply more Diesel to Europe
Jackpot for Mukesh Ambani: Reliance Inds Supply more Diesel to Europe அடித்தது ஜாக்பாட்.. ஐரோப்பாவுக்கு டீசல் ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..! இனி முகேஷ் அம்பானிக்கு செம லாபம்..!