கீவ்:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஆனாலும், மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின என உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் குழந்தைகள், மக்கள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகள் வழியாகச் செல்கின்றனர். இது மிகவும் கொடுமை என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…ரஷியாவால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது- ஜோ பைடன்