முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்பு மூன்று நாட்கள் மாநாடு இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது.
மார்ச் 10 (இன்று),11 (நாளை),12 (நாளை மறுநாள்) ஆகிய மூன்று நாட்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
ஆளுநர் உரை, முதலமைச்சரின் செய்தி வெளியிடுகள், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் ஆயிரத்து 704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அவற்றில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகளில் அறிவிப்புகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில்
மீதமுள்ள அறிவிப்புகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் மூலம் அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும் விரைவாக செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது.