சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் எட்டு பெண்கள், எட்டு நிமிடங்கள் என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் (08) தினம் நடைபெற்றன.
இதன்போது முன்னுதாரணமாக திகழும் வைத்தியர் பபாஸ்ரீ ஜினிக்கே, சஞ்சினி முனவீர, சௌந்தரி டேவிட் டொட்றிக்கே, றோயல் ரெமன்ட், குமுது பிரியங்கா, சிரோமல் கூரே, அனோக்கா அபேரத்தின மற்றும் புலணி ரணசிங்க ஆகிய எட்டு பெண்மணிகளால் நாட்டை தலைமைத்துவம் செய்யும் பொறுப்பு கிடைக்கப்பெற்றால் தாம் ஆற்றும் பணிகள் குறித்து எட்டு நிமிடங்கள் உரையாற்றினார்கள்
இந்நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அளகப்பெரும, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ, இலங்கை மற்றும் பங்களாதேஸ்க்கான Fradrich Nauman நிறுவனத்தின் தலைமை அதிகாரி வொல்ஸ்ப்கங் கெயின்ஸ்ட், அடுத்த தலைமுறைக்கான Co-Convenor ரஷிக ஜயகொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.