உக்ரைனின் 5 நகரங்களில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து வருகிறது.

மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சிலமணிநேரங்கள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று 5 நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. கிவ், சுமி, கார்கிவ், மரியு போல், செர்னிஹிவ் ஆகிய 5 நகரங்களில் இந்திய நேரப்படி இன்று 12.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மைய தலைவர் மிகைல் மிஜின்சேவ் கூறும்போது, ‘இன்று 5 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் தகவல் உக்ரைன் துணை பிரதமர் வேரேசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது’ என்றார்.

ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்தாலும் அதனை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.