வாஷிங்டன்,
உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இவற்றில், அமெரிக்கா அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் 39,200 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.10 கோடியாக உயர்வு அடைந்து உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 1,265 பேர் உயிரிழந்து உள்ளனர். பிரான்சில் 69,190 பேரும், இங்கிலாந்தில் 67,159 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து பிரேசிலில் 49,078 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
எனினும், அதிக அளவாக ஜெர்மனியில் 1,91,973 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 93 லட்சத்து 41 ஆயிரத்து 86 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 60 லட்சத்து 42 ஆயிரத்து 850 பேர் உயிரிழந்துள்ளனர்.